ஆட்டோ–போலீஸ் வேன் நேருக்கு நேர் மோதல்–2 பேர் பலி
வெம்பாக்கம் அருகே ஆட்டோவும், போலீஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் கர்ப்பிணி மற்றும் குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
வெம்பாக்கம்,
ஆட்டோவில் பயணம்
செய்யாறு அருகே வெம்பாக்கத்தை அடுத்த சோழவரம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் தீபன் (வயது 24), கூலித்தொழிலாளி. இவருக்கும் ஆறுமுகம் என்பவர் மகள் அஞ்சாலாச்சி (22) க்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அஞ்சாலாச்சி கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அஞ்சலாச்சியை கணவர் தீபன், தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் பகல் 1 மணியளவில் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு காஞ்சீபுரத்திற்கு நேற்று புறப்பட்டனர். அப்போது காஞ்சீபுரத்திலிருந்து செய்யாறு நோக்கி போலீஸ் வேன் ஒன்று வந்தது.
சோழவரம் காலனி மெயின்ரோட்டில் இவர்கள் சென்ற ஆட்டோவும் எதிரே வந்த போலீஸ் வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. அதில் பயணம் செய்த தீபன், குணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கர்ப்பிணியான அஞ்சாலாச்சி, அவரது தந்தை ஆறுமுகம், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து துடிதுடித்தனர்.
அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிய தொடங்கினர். அவர்கள் விபத்தை கண்டித்தும், வேகத்தடை அமைக்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா மற்றும் தூசி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போது நடந்த விபத்து போல இனி எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட வேண்டும். மேலும் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், போலீஸ் வேனை ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மேலும், இது குறித்து தகவல்அறிந்த செய்யாறு எம்.எல்.ஏ. தூசி மோகன், உதவி கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர், வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள் சோழபுரம் காலனி ஊராட்சி தலைவர் இளங்கோவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story