மதுபானம் விற்பதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
புஜ்ஜிநாயுடுகண்டிகை மண்டலத்தில் மதுபானம் விற்பதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி,
மதுபானம் விற்பனை
புச்சிநாயுடுகண்டிகை மண்டலம் குமாரவெங்கடாபுரம் கிராமத்தில் பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்கப்படுவதாகவும், அதனை போலீசார் தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கலால் போலீசாரிடம் புகார் செய்து வந்தனர். இதுதொடர்பாக, கலால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்காததாலும், மதுவினால் அப்பகுதி இளைஞர்கள் சீரழிவதாலும் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து நேற்று முன்தினம் தடா–ஸ்ரீகாளஹஸ்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள சில பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் பலர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் வருமானத்தில் அவர்கள் மது குடித்து, தங்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழித்துக் கொள்கின்றனர். குடும்பம் நடத்த முடியாமல் நாங்கள் அவதிப்படுகிறோம். மதுபானம் விற்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சு வார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும், புஜ்ஜிநாயுடுகண்டிகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் தடா–ஸ்ரீகாளஹஸ்தி சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story