தீபா பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம்


தீபா பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-18T02:06:59+05:30)

ஆற்காட்டில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் குட்டக்கரை தெருவில் நடைபெற்றது.

ஆற்காடு,

நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க.முன்னாள் நகரசபை உறுப்பினர் ஏ.எஸ்.மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் ஆற்காடு நகரை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட பொறுப்பாளர் சேகர் கூறுகையில், ‘‘வேலூர் கிழக்கு மாவட்டத்தில் இதுவரை தீபா பேரவையில் ஏராளமானோர் சேர்ந்துள்ளனர். இன்னும் பலர் ஆர்வத்துடன் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வாங்கி சென்று பூர்த்தி செய்து அளித்துள்ளனர். இதனை விரைவில் தீபாவை நேரில் சந்தித்து வழங்குவோம்’’ என்றார்.


Next Story