ஏ.டி.எம்.மூலம் ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் என்ற அறிவிப்பால் திருப்பூர் தொழிலாளர்கள், தொழில்துறையினர் மகிழ்ச்சி
ஏ.டி.எம். மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் திருப்பூர் தொழில்துறையினர், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணப்புழக்கம்
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது.
இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனத் தினர் மட்டுமின்றி தொழிலாளர்களும் பாதிக்கப்பட் டனர்.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் குறைவான அளவிலான பணம் மட்டுமே எடுக்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், தேவையான மூலப்பொருட்களை வாங்க, கொள்முதல் செய்ய முடியாத நிலையால் ஆடை உற்பத்தி வெகுவாக குறைந்தது.
ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை
மேலும், தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாததாலும், பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சுணக்கம் காட்டி வந்ததாலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்று முதல் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:-
தொழிலாளர்கள் மகிழ்ச்சி
மத்திய அரசின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு தொழில்துறை, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தற்போது உச்ச வரம்பு தளர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை ஏ.டி.எம். மையங்களில் எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் திருப்பூரில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், உச்ச வரம்பு எதுவும் இன்றி தேவையான அளவுக்கு பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை விரைவில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் சரிவை கண்ட திருப்பூர் வர்த்தகம் மீண்டும் சீரடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story