பவானிஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முயற்சி: கேரள அரசை கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம்
கேரள அரசை கண்டித்து கோவையில் வருகிற 21-ந்தேதி மனிதச்சங்கிலி போராட்டம்
அனைத்துக்கட்சி கூட்டம்
பவானி ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை கண்டித்து கோவை தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி (தி.மு.க.) முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து அனைத்துக்கட்சியினர் கூறியதாவது:-
பவானி ஆறு
கேரள மாநிலம் சித்தூர் அருகே உள்ள அகழி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே 500 மீட்டர் நீளத்திலும், 50 அடி உயரத்திலும் தடுப்பணை கட்ட கடந்த ஆண்டில் கேரள அரசு திட்டமிட்டது. இதற்கு தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் பவானி ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்க கூடியது. பவானி ஆறு, மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியான அப்பர் பவானி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து கேரளமாநிலம் முக்காலி என்ற இடம் வழியாக கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் பவானி ஆறு தமிழகத்துக்கு திரும்பி வருகிறது.கோவையை அடுத்த அத்திக்கடவு அருகே முள்ளி என்ற இடத்தில் பில்லூர் அணையில் பவானி ஆறு சேருகிறது.
தடுப்பணை கட்டும் பணி
அதன் பிறகு பில்லூர் அணையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானி சாகர் வழியே காவிரி ஆற்றில் கலந்து பின்னர் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் 2-வது பெரிய ஆறு பவானி ஆறு ஆகும். இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக தேக்குவட்டை என்ற இடத்தில் 15 அடி உயரத்தில், 200 அடி அகலத்தில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கி உள்ளது. இங்கு தடுப்பணை கட்டப்பட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும். கோவையில் சிறுவாணி, மற்றும் பில்லூர் அணைகளில் இருந்துதான் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை பொய்த்துள்ளதால் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்க கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது.
தடுத்து நிறுத்த வேண்டும்
இதற்கிடையில் சிறுவாணி அணை வறண்ட நிலையில் பில்லூர் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை வைத்துதான் கோவையின் குடிநீர் தேவை சமாளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பில்லூர் அணையின் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் கோவையில் குடிநீருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பவானி ஆறு தமிழகத்தில் உற்பத்தியாவதால் முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சொந்தமானது ஆகும். அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும். அதையும் கேரள அரசு செய்யவில்லை. எனவே கேரள அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மனித சங்கிலி போராட்டம்
ஆகவே பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை கண்டித்தும், இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தக்கோரியும் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடக்கிறது. 29-ந்தேதி அணை கட்டும் இடத்துக்கு சென்று முற்றுகை, மறியல் போராட்டம் நடத்துவோம். அதனை தொடர்ந்து இரு மாநில முதல்-அமைச்சர்களை கூட்டுக்குழு சார்பில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் மு.முத்துசாமி (தி.மு.க), நீலா மணிமாறன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), டாக்டர் தங்கராசு (கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம்), அபிபுல்லா, கே.முத்துராஜ், (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), ஜெம்பாபு, கரீம் (மனித நேய மக்கள் கட்சி), சுந்தரராஜ் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்), மற்றும் எஸ.டி.பி.ஐ. கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்குநாடு ஜனநாயக கட்சி, ஆதி தமிழர் விடுதலை முன்னி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story