கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை கண்டித்து கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கட்டண உயர்வு
போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க மற்றும் சில அபராத கட்டணங்களை உயர்த்தியதற்கும், மோட்டார் தொழிலை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து அனைத்து ஆட்டோ ஓட்டுனர் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சி.ஐ.டி.யு. தலைவர் சுகுமாறன் கூறியதாவது:-
போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க ரூ.300 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.640 ஆகவும், தர பரிசோதனை (எப்.சி) கட்டணம் ரூ.225-ல் இருந்து ரூ.625 ஆகவும், லேட் எப்.சி அபராதம் 60 நாட்கள் வரை ரூ.100 ஆக இருந்தது ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
வாபஸ் பெற வேண்டும்
மத்திய அரசு கொண்டு வந்த இந்த முடிவை மற்ற மாநிலங்கள் இதுவரை அமல்படுத்த வில்லை. ஆனால் தமிழக அரசு இதை அமல்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆட்டோ ஓட்டுனர்கள் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள கட்டண உயர்வு ஆட்டோ ஓட்டுனர்களை பாதிப்படைய செய்து உள்ளது. எனவே, இந்த கட்டண உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் தமிழ கத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story