கூடலூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவி சாவு
கூடலூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவி
கூடலூர் அருகே ஆமைக்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஸ்கூட்டர் ஓட்டி பழகுவதற்கு நந்தினி ஆசைப்பட்டார். இதை தனது பெற்றோரிடம் கூறினார். அப்போது உறவினரான சுமன் (27) ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு பயிற்சி அளிப்பதாக கூறினார். இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு ஆமைக்குளம் பஸ் நிறுத்தம் அருகே நந்தினி ஒரு ஸ்கூட்டரை ஓட்டி பழகி கொண்டிருந்தார். ஸ்கூட்டருக்கு பின்னால் சுமன் அமர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், சமையல் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஸ்கூட்டர் மீது லாரி மோதல்
பஸ்நிறுத்தம் அருகே லாரி வந்தபோது நந்தினி ஸ்கூட்டரில் அங்கு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் நந்தினி பரிதாபமாக இறந்தார். அவருடைய உறவினர் சுமன் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சுமனை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story