தாம்பரத்தில் பெண்ணிடம் நகை, பணம், செல்போன் திருட்டு


தாம்பரத்தில் பெண்ணிடம் நகை, பணம், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 18 Jan 2017 2:52 AM IST (Updated: 18 Jan 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம், சுண்ணாம்புகொளத்தூர், விநாயகபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43).

தாம்பரம்,

தாம்பரம் அடுத்த கோவிலம்பாக்கம், சுண்ணாம்புகொளத்தூர், விநாயகபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43). இவர் பொங்கல் விடுமுறைக்காக சொந்தஊரான திண்டிவனம் சென்று விட்டு நேற்று காலை தாம்பரம் வந்தார்.

தாம்பரத்தில் இருந்து கோவிலம்பாக்கம் செல்வதற்காக பஸ்சில் ஏறிய விஜயலட்சுமி, டிக்கெட் எடுப்பதற்காக பையை பார்த்தபோது பை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பையின் உள்ளே பார்த்தபோது பையில் இருந்த 5 ஆயிரம் ரூபாய், 1½ பவுன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story