ஊத்துக்கோட்டை அருகே ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை அருகே ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2017 3:15 AM IST (Updated: 18 Jan 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் ஊத்துக்கோட்டையில் ஊர்வலமாக சென்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊத்துக்கோட்டை,

‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் ஊத்துக்கோட்டையில் ஊர்வலமாக சென்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புயலால் சேதம்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை, வெலமகண்டிகை கிராமங்களில் ‘வார்தா’ புயலால் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு பயிர் ஆகியவை நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் தமிழக அரசு, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாகவும், பயிர் சேதத்துக்கு ஏற்்ப இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 465 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சேதமடைந்த பயிர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அனுப்பும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

கோரிக்கை மனு

அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களின் விவர அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் சில விவசாயிகளின் பெயர்கள் மட்டும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்தும், அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் வெலமகண்டிகையை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகம் சென்றனர். அங்கு தாசில்தார் விஜயலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று தாசில்தார் விஜயலட்சுமி உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story