மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரவாயலில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சி
மதுரவாயலில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
மதுரவாயலில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடையை மீறி மஞ்சுவிரட்டு
ஜல்லிகட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த அனு மதிக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையை அடுத்த மதுரவாயலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நேற்று மாலை மஞ்சுவிரட்டு நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதனால் மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் மற்றும் ஆலப்பாக்கம் கூட்டு சாலையில் அதிகளவில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாடுகளுடன் ஊர்வலம்
அப்போது சின்ன நொளம்பூர் பகுதியிலிருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க இரண்டு மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துவந்தனர். அவர்கள் மாடு களை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனால் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திவிடுவார்களோ என்று போலீசாரும் அவர் களுடனே ஊர்வலத்தில் சென்றனர்.
மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி முன்பு மாடுகளை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மாடுகள் கூட்டத்தில் மிரள ஆரம்பித்தன. இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
மாடுகளும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட் டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story