‘தீபாவை தூண்டி விடுகிறார்கள்’ உரிய நேரத்தில் ஆதாரத்தை வெளியிடுவேன் என்று ம.நடராசன் பேட்டி
தீபாவை தூண்டி விடுகிறார்கள் என்றும் இதற்கான ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் ம.நடராசன் கூறினார்.
தஞ்சாவூர்,
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வரலாறு. இது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது. பீட்டா அமைப்பு போட்ட வழக்கை வைத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் காளையை காட்சிப்பட்டியலில் சேர்த்தனர். அப்போது மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆனால் தற்போது தி.மு.க.வினர் ஜல்லிக்கட்டுக்காக வீராவேசம் பேசுகிறார்கள்.
தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தீர்ப்பு வந்த பின்னர் தான் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க முடியும். ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மாணவர்கள் எழுச்சியை வரவேற்கிறேன். ஆனால் அவர்களை தூண்டி விடுவதால் தான் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் இதை இந்தி எதிர்ப்பு போராட்டத்தோடு ஒப்பிடக்கூடாது.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பி ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
ஆட்சியை உடைக்க முயற்சி
பிரதமர் மோடி நல்லமனிதர். சாமானியன் சரித்திரம் படைக்கலாம் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஏற்ப சாமானியனான பிரதமர் மோடி கடின உழைப்பு மூலம் முன்னேறி உள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் அவர் மூலம் சிலர் மதவாதத்தை திணித்தால் நாங்கள் எதிர்ப்போம். தமிழகத்தில் ஆட்சியை உடைக்க முயற்சி நடக்கிறது என்று நான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
பா.ஜனதா கட்சியினர் அருணாசலபிரதேசம், மணிப்பூரில் ஆட்சியை பிடித்தது போல் இங்கு ஆட்சியை பிடித்து விடலாம் என திட்டம் போடுகிறார்கள்.
தூண்டி விடுகிறார்கள்
தீபாவை உங்கள் ஆட்கள் இயக்குகிறார்கள் என்றால் ஏன் பயப்படுகிறீர்கள். அவரை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தீபாவை தூண்டிவிடவில்லை என்று கூற முடியுமா?
இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. அதை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
தீபா எங்களிடம் வருவார்
ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அதை கொச்சைப்படுத்தாதீர்கள். தீபாவும் அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறி உள்ளார். நோயாளி, யாரையும் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என கூறும் போது எப்படி மற்றவர்களை அனுமதிக்க முடியும். அது போல தான் தீபாவையும், ஜெயலலிதா பார்க்க அனுமதிக்கவில்லை. அரசியல் ஆக்க முயற்சி செய்பவர்கள் இதனை கொச்சைப்படுத்துகிறார்கள். தீபா எங்கள் வீட்டுப்பிள்ளை. அவர் மீண்டும் எங்களிடம் வருவார்.
நீக்க வேண்டியது தானே?
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். ஆனால் பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஜல்லிக்கட்டுக்காக தனது காளையை அவிழ்த்து விட்டுள்ளார். அவரை பா.ஜ.க.வில் இருந்து நீக்க வேண்டியது தானே.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story