பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவ-மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விடிய, விடிய போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
2-வது நாளாக..
நேற்று 2-வது நாளாகவும் இந்த போராட்டம் தொடர்ந்தது. காலையில் மாணவர்கள் மைதான வளாகத்திலேயே காலை உணவு அருந்திவிட்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பதாகைககளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் திரண்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். ஒவ்வொரு கல்லூரிகளை சேர்ந்த மாணவ பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அவசர சட்டம் இயற்றி அனுமதி வழங்க வேண்டும். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சித்தா -சட்டக்கல்லூரி
இவர்களுக்கு ஆதரவாக நெல்லை அரசு சட்டக்கல்லூரி மற்றும் சித்தா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வ.உ.சி. மைதானத்துக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் அருகில் உள்ள வ.உ.சி. மைதானத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
என்ஜினீயரிங் மாணவர்கள்
இதே போல் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆயிரக்கணக்காண மாணவ-மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் வகுப்புகளுக்கு சென்றனர். நெல்லை அருகே சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
வக்கீல்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லையை சேர்ந்த வக்கீல்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் கோர்ட்டு முன்பு உள்ள நெல்லை -தூத்துக்குடி ரோட்டில் வக்கீல்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவல் சண்டை
மேலும் அவர்கள் நடுரோட்டில் சேவல் சண்டை போட்டி நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்த காளையை போலீசார் கே.டி.சி. நகர் சோதனை சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்துச் சென்று விட்ட தகவல் வக்கீல்களுக்கு தெரியவந்தது. இதை கண்டித்து அவர்கள் அந்த வழியாக சென்ற பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்தினார். இதையடுத்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் மாணவ-மாணவிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கல்லூரி வாசலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பனவடலிசத்திரம் பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு நேற்று காலை முதல் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பயணியர் விடுதி முன்பு திரள தொடங்கினர். தொடர்ந்து நுாற்றுக்கணக்கானவர்கள் அந்த பகுதியில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேரன்மாதேவி
சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை வகுப்பறைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வரை வகுப்பறைக்கு செல்லமாட்டோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்று விட்டனர்.

Next Story