சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நெல்லை மாநகர போக்குவரத்து துறை சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் விழிப்புணர்பு பேரணி நேற்று காலை தொடங்கியது.
நெல்லை,
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நெல்லை மாநகர போக்குவரத்து துறை சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் விழிப்புணர்பு பேரணி நேற்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் முன்னிலை வகித்தார்.
வண்ணார்பேட்டை மேம்பாலம் வழியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. காவல்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கனரக ஓட்டுனர்கள், வாகன விற்பனையாளர்களின் பிரதிநிதிகள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நாகூர்கனி, பெருமாள், செங்குட்டுவேல், முகம்மதுமீரான், தமிழ்நாடு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் முத்திரம், ஜெபராஜ், சுப்பிரமணி, ஊர்க்காவல் படை கம்பெனி கமாண்டர் மணிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் டீம் டிரஸ்ட் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். நயினார் முகமது வரவேற்றார்.
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு, பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். பின்னர் அந்த வழியாக வந்த பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.