காளைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் ரெயில் மறியலில் ஈடுபட்ட 27 பேர் கைது
வேலூரை அடுத்த ஊசூரில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி பொதுமக்கள் காளை களுடன் மறியல் போராட்டம் நடத்தினர். வேலூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடுக்கம்பாறை,
காளைகளுடன் சாலை மறியல்
வேலூரை அடுத்த ஊசூர், கோவிந்தரெட்டிபாளையம், அத்தியூர், சிவநாதபுரம், புலி மேடு, சேக்கனூர், தெள்ளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் நேற்று ஊசூர் பஸ்நிறுத்தத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கருப்பு கொடியுடனும், கருப்பு சின்னம் அணிந்தும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டது.
அப்போது சிலர் காளை களை அலங்கரித்து அழைத்து வந்து காளை களுடன் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்று திரண்டு வேலூர்- ஒடுகத்தூர் சாலையில் திடீர் என காளைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கல்லூரி மாணவர்கள்
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியூர் போலீசார், போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொது மக்கள் தொடர்ந்து போரா ட் டத்தில் ஈடுபட்டனர். இத னால் அந்தப்பகுதியில் போக் குவரத்து பாதிக்கப் பட்டது. உடனே போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து செல்லாவிட்டால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து அவர்களை கலைந்து போகச்செய்தனர்.
அதேபோன்று கணியம் பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு ஒன்றுதிரண்டு ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பி பீட்டா என்று எழுதப்பட்ட பேப்பரை தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் வேலூரில் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
ரெயில் மறியல் போராட்டம்
வேலூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்த ரெயில் மறியல் போராட் டத்தையொட்டி வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக இளைஞர்கள், மாணவர்கள் பலர் வேலூர் கன்டோன் மென்ட் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர் களை ரெயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத் தனர். ஆனாலும் அவர்கள் தடையை மீறி சென்று அரக் கோணத்தில் இருந்து வேலூர் வந்த பயணிகள் ரெயில் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடு பட்டனர்.
ரெயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதாக த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
வக்கீல்கள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வேலூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக் கணித்து, கோர்ட்டு முன்பு நாற்கர சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story