ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு : மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு : மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:47 AM IST (Updated: 19 Jan 2017 4:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்.

சென்னை,

சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த வித இடையூறும் இல்லாத வகையில் சாலையின் ஓரமாக நின்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் சிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், பீட்டாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

மருத்துவ கல்லூரியின் உள் வாயில் முதல் வெளிப்புற வாயில் வரையில் மாணவ, மாணவிகள் கைகளை கோர்த்தபடி வரிசையாக நின்றபடி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story