தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து விருத்தாசலத்தில், பள்ளி மாணவர்கள் தர்ணா


தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து விருத்தாசலத்தில், பள்ளி மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 19 Jan 2017 4:57 AM IST (Updated: 19 Jan 2017 4:57 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடமாற்றம்

விருத்தாசலம் புதுக்குப்பத்தில் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ரவீந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதையறிந்த பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவர்களிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கூறினர்.

இதையடுத்து மாணவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அலுவலர் கோமதி கூறினார். இதையேற்ற மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story