ஸ்டவ் அடுப்பு வெடித்தது: சப்-இன்ஸ்பெக்டர் உயிர் இழந்தார்


ஸ்டவ் அடுப்பு வெடித்தது: சப்-இன்ஸ்பெக்டர் உயிர் இழந்தார்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:07 AM IST (Updated: 19 Jan 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் காமராஜர் நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் கற்பகமணி (வயது 57). இவர், சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் காமராஜர் நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் கற்பகமணி (வயது 57). இவர், சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு எண்ணூர் வள்ளுவர் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் தோசை சுடுவதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்றவைத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது உடலில் தீப்பிடித்துக்கொண்டது. பலத்த தீக்காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கற்பகமணி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி கற்பகமணி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு பிச்சுபூங்கனி (50) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இன்னும் 4 மாதத்தில் கற்பகமணி பணி ஓய்வுபெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story