மயிலாப்பூரில் துணிகரம் வங்கி லாக்கரை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை
சென்னை மயிலாப்பூரில் வங்கி லாக்கரை உடைத்து 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை,

ஜன்னல் கம்பி உடைப்பு
சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் ‘யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா’ என்ற வங்கியின் கிளை உள்ளது. நேற்று காலை வங்கி ஊழியர்கள் கதவை திறந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது. வங்கியின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகளை ‘வெல்டிங் மெஷின்’ மூலம் உடைத்து கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டது.
வங்கிக்குள் இருந்த 3 லாக்கர்களையும் ‘வெல்டிங் மெஷின்’ மூலம் உடைத்திருந்தனர். அந்த லாக்கர்கள் தனியாருக்கு சொந்தமானவை. அந்த லாக்கருக்குள் வைத்திருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு வங்கி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்தபிறகுதான் லாக்கருக்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் எவ்வளவு என்பது பற்றிய உண்மையான நிலவரம் தெரியவரும் என்று வங்கி ஊழியர்கள் கூறினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
பள்ளி மைதானம் வழியாக...
கொள்ளையடிக்கப்பட்ட வங்கியின் பின்புறம் உள்ள மேல்நிலைப்பள்ளியின் மைதானம் வழியாக கொள்ளையர்கள் வந்துள்ளனர். அதன்பிறகு வெல்டிங் மெஷின் மூலம் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்துள்ளனர். பள்ளி மைதானம் ஒதுக்குப்புறமாக இருப்பது கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story