திருவள்ளூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி
திருவள்ளூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,

மனித சங்கிலி போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் கல்லூரி மாணவர்கள், நாம் தமிழர் கட்சி, விஜய் மக்கள் இயக்கம், தி.மு.க. மாணவர் அணி சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர் ஒருவர் திடீரென ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் மேலே இருந்த செல்போன் கோபுரத்தின் மேல் ஏறினார். அப்போது அவர் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த சக வாலிபர்கள் உடனடியாக செல்போன் கோபுரத்தில் ஏறியவரை சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தார்கள். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆயில் மில் பகுதியில் இருந்து பெரியகுப்பம் வரை பேரணியாக சென்றார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் நா.வெங்கடேசன், மாநில இளைஞர் அணி செயலாளர் இ.தினேஷ்குமார் ஆகியோர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள்.
பேரம்பாக்கம்
அதேபோல பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென பேரம்பாக்கம் பஜாரில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பள்ளிப்பட்டு-ஆர்.கே.பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தி கலைந்து செல்லும்படி செய்தனர். மறியல் போராட்டத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதே போல் பள்ளிப்பட்டு தாலுகா செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பொதட்டூர்பேட்டையிலும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள குழுவை சேர்ந்த நண்பர்கள், பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிலத்தரகர் சங்க நிர்வாகிகள் பெண்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் பீட்டாவையும் அன்னிய பானங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
திருத்தணி
ஜல்லிக்கட்டு நடத்திக்கோரி திருத்தணியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டுகளில் பணிபுரியும் வக்கீல்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு வெளிநடப்பு செய்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள். திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் முன்பு நின்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள மகேந்திரா தொழிற்பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு தடைவிதிப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திடீரென சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கையில் பீட்டா அமைப்பை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை பிடித்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமலிருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராத மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வலியுறுத்தியும் கோஷங் கள் எழுப்பப்பட்டது.
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரமேரூர் போலீசார் செய்திருந்தனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அங்குள்ள வணிகர் வீதியில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகள், வாலிபர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகள் தங்கள் சீருடையில் வந்திருந்தனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். காஞ்சீபுரம் பார் அசோசியேசன், காஞ்சீபுரம் அட்வகேட் அசோசியேசன், லாயர்ஸ் அசோசியேசன் அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வக்கீல்களும் பேரணியாக வந்து ஆதரவளித்தனர். போராட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர் முதல் திருப்போரூர் வரையுள்ள பகுதிகளில் உள்ள நாவலூர், சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், கலவக்கம் உள்ளிட்ட கல்லூரிகளில் 25-க்கும் மேற்பட்ட தனியார் என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி அவரவர் படிக்கும் கல்லூரிகளின் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இதே சாலையில் சிறுசேரி தகவல் தொழில் நுட்ப பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சரப்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று காலை இளைஞர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். பின்னர் பஜார் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அச்சரப்பாக்கம் லூப்ரோடு தேசிய நெடுஞ்சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்ததையடுத்து, இரவு 7 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story