ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதம்


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:33 AM IST (Updated: 19 Jan 2017 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திருவாரூரில் மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரடாச்சேரியில் காளைமாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி்ருவாரூர்,

உண்ணாவிரதம்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழந்்து வருகிறது. ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு அவசியம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையி்ல் நேற்று திருவாரூர் நகராட்சி் அலுவலகம் முன்பு மண்ணின் மைந்தர்கள், முகநூல் நண்பர்கள் குழுவினர் தொடர் உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஜெய்சிங் தலைமை தாங்கினார். இதி்ல் நவீன், ராஜா, சகாபுதீன், ஆனந்த், கமல்ராஜ், செந்தி்ல், குணா, வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தி்ருவாரூரில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல

நேற்று கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் மாணவர்கள்-இளைஞர்்கள் காளை மாடுகளுடன் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் பாரதி உள்பட மாணவர்கள்-இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது

பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேணடும். ஜல்லிக்கட்டை உடன் நடத்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தை அடுத்த கோவில்வெண்ணியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். இதில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல் பீட்டா அமைப்பை கண்டித்து நகர முக்கிய வீதிகளின் வழியாக நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் தலைமையில் வர்ததகர்கள், மாணவர்கள், நண்பர்கள், மன்றத்தினர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டக்குழு ஊறுப்பினர்கள் ஜெ.பி.வீரபாண்டியன், கே.அபிநயா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் பேசினர். இதில் மாணவர் மன்ற நிர்வாகிகள் டி.திரிசங்குராஜன், ஆர்.சந்தோஷ், டி.விஜயராகவன், ச.முருகன், பி.காளிதாஸ் டி.தினேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல மன்னார்குடியை அடுத்த செருமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

திரு.வி.க. அரசு கல்லூரி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுத்தி கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையி்ல் திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பி்ரசாத் தலைமை தாங்கினார்.

Next Story