காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்
காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் பொதுமக்கள், வக்கீல்கள் ஆதரவு
ஜல்லிக்கட்டு
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் இப்போட்டிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது தடை நீங்கி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தடையை நீக்கவில்லை.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இளைஞர்களும் திடீர் போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம் நடத்தினர். மாநிலத்தின் தலைநகரான சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் எழுச்சி போராட்டம்
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அளிக்கப்பட்டிருந்த தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று அனைத்து கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கல்லூரி மாணவர்கள் கல்லூரி செல்லாமலும், வகுப்புகளை புறக்கணித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் முழுவதும் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பிரமாண்ட போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், வக்கீல்களும் கலந்துகொண்டனர்.
அழகப்பா பல்கலைக்கழகம் முன்பு...
காரைக்குடியில் ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி, என்ஜினியரீங் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் போராட்டம் நடத்துவதாக தகவல் பரப்பினர். அதன்படி காலை முதலே அழகப்பா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் ஒன்றாக கூடி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்ல, செல்ல போராட்டக்காரர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் போலீசார் அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்தனர். கோவிலூரில் உள்ள நாச்சியப்பன் சுவாமி கல்லூரியிலும் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலம்
இருப்பினும் போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்று நகருக்குள் வந்தனர். பின்னர் காரைக்குடி கோர்ட்டு அருகே ஊர்வலம் வந்தபோது, கோர்ட்டு பகுதியில் நின்றிருந்த வக்கீல்களும் மாணவர்கள் போராட்டத்துடன் தங்களை இணைந்து கொண்டனர். மேலும் இதில் மக்கள் மன்றம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஊர்வலம் நகரின் மையப்பகுதியான பஸ் நிலையம் முன்பு வந்தடைந்தது. அங்கு மாணவ பிரதிநிதிகள் கண்டன உரையை எழுப்பினர்.
உண்ணாவிரத போராட்டம்
மேலும் போராட்டத்தின்போது மாணவர்களின் ஒரு பிரிவினர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை கேள்விப்பட்ட கிராமமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு பேரவை, மஞ்சுவிரட்டு பாதுகாப்பு குழு, மாட்டு வண்டி பந்தயம் பாதுகாப்பு குழுவினர் கிராமமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது உணர்வுப்பூர்வமான ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பும் சிலர் சாலையோரம் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிவகங்கை
ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் ஊர்வலமாக சென்று சிவகங்கை அரண்மனை வாசலை அடைந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை இந்த போராட்டத்தை தொடருவோம் என்றும், பீட்டாவை வன்மையாக கண்டிக்கிறோம், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு பஸ்கள், வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டம் நடத்தியவர்களிடம் சிவகங்கை நகர் போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை
மானாமதுரையில் பழைய பஸ் நிலையம் முன்பு கூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என ஏராளமானோர் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் அங்கு பந்தல் அமைத்து போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது மானாமதுரையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கூறும்போது, தமிழகமே போராட்ட களத்தில் குதித்திருக்கும் இந்த வேளையில், மத்திய-மாநில அரசுகள் மவுனமாக இருப்பது பொறுப்பு இல்லாததை காண்பிக்கிறது என்றார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள மருதிப்பட்டி, எஸ்.வி.மங்கலம், எம்.சூரக்குடி, புழுதிபட்டியில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் எஸ்.புதூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பஸ் நிலையம் எதிரில் திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் அமர்ந்து பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சூரக்குடியிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். எஸ்.புதூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சிவராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதேபோல் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில்
காளையார்கோவில் சொர்ண காளஸ்வரர் கோவில் முன்பு 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்யக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி போராட்ட கோஷங்களை எழுப்பினர்.

Next Story