ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் கீழக்கரை-ராமநாதபுரம் இடையே மாணவர்கள் நடைபயணம்
மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடைபயணம் சென்றனர்.
போராட்டம்
தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டா அமைப்பின் உருவபொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இதேபோல, ராமநாதபுரம் மாவட்ட அனைத்து பொதுநல அமைப்புகள், கலை பண்பாட்டு மீட்பு குழுவினர், ரோட்டரி சங்கத்தினர், கல்லூரி மாணவர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நடைபயணம்
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தொடங்கி அம்மா பூங்கா வரையிலும் 1000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கைகோர்த்து வரிசையாக நின்று தங்களின் கருத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் அம்மா பூங்காவில் அமர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், தமிழகத்தில் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து வெளியில் திரண்டனர். இதன்பின்னர் மாணவ-மாணவிகள் அனைவரும் கீழக்கரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் நடைபயணமாக ராமநாதபுரம் நோக்கி வந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ஒன்று சேர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கல்வீச்சு
ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பெரியார் நகர் இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ் பின்பக்க கண்ணாடியை சிலர் கல்வீசி தாக்கினர்.
பரமக்குடி
பரமக்குடி காந்தி சிலை முன்பு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொது நல அமைப்பினர் என ஏராளமானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் தாங்களாகவே விரும்பி வந்து, ஆதரவு தெரிவித்து வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி, இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
இதேபோல காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அரசு ஐ.டி.ஐ. மாணவர்களும், அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
ராமேசுவரம்
இதேபோல ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் தமிழர் தேசிய முன்னணி மாநில பொது செயலாளர் கண்.இளங்கோ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாதபன், நகர் செயலாளர் சூர்யகுமார், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நம்புராஜன், இளைஞர் கூட்மைப்பின் தலைவர் சதீஷ், ராஜிவ்காந்தி, பிரேம், சுல்தான் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் பீட்டாஅமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு நடத்திட மத்தியஅரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி மதிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ஜெயந்தி உள்பட போலீசார் அவர்களை கைது செய்து ராமேசுவரத்தில் உள்ள ஒரு திருமணமண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story