கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணுக்கு சூடு வைத்ததாக 5 பேர் கைது
ஓசூரில் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணுக்கு சூடு வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கள்ளத்தொடர்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், ஓசூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவருடைய மகன் மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்ததும் லட்சுமி, தனது மகனுடன் உள்ள கள்ளத் தொடர்பை கைவிடுமாறு அந்த பெண்ணை எச்சரித்தார்.ஆனாலும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாமல் மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி, தனது கணவர் சென்னப்பா (47), தளி அருகே உள்ள அடவிசாமிபுரத்தைச் சேர்ந்த எல்லம்மா (35), விஜய் (29), தொட்டண்ணா (37), ஆனேக்கல் ரசுமானப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் (34) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினார்கள்.
5 பேர் கைது
மேலும் அந்த பெண்ணின் உடலில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அந்த பெண் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயராணி விசாரித்து, சென்னப்பா, அவரது மனைவி லட்சுமி மற்றும் எல்லம்மா, விஜய், சந்தோஷ் ஆகிய 5 பேரை கைது செய்தார். தலைமறைவான தொட்டண்ணாவை தேடி வருகிறார்.

Next Story