தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் 1 லட்சம் எக்டர் பயிர்கள் சேதம் கலெக்டர் ரவிகுமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் 1¾ லட்சம் எக்டர் பயிர்கள் சேதம் அடைந்ததாக, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் 1¾ லட்சம் எக்டர் பயிர்கள் சேதம் அடைந்ததாக, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் தீபக்ஜேக்கப், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு தீர்மானம்
மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் முழுமையாக வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும். 2015-16-ம் ஆண்டுக்கான இன்சூரன்சு தொகை வழங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில்...
முக்காணியில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவதை விட தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் எவ்வளவு சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. முழுமையாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி விவசாயிகள் நிவாரணம் பெறுவதற்கான முயற்சி செய்கின்றனர். அதனை தடுக்க வேண்டும். கடம்பா குளம் கடந்த 140 ஆண்டுகளாக எந்த மேம்பாட்டு பணியும் நடைபெறவில்லை. கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய இன்சூரன்சு தொகையை, சங்க செயலாளர் விவசாயிகளிடம் திருப்பி கொடுத்து உள்ளார். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் விவசாயி அல்லாதவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. அங்கு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
வறட்சி பாதிப்பு
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் கூறியதாவது:-
மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தொழில்நுட்ப ரீதியாக 53 கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 95 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தவிர அனைத்து கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வறட்சியால் 1 லட்சத்து 63 ஆயிரத்து 515 எக்டர் மானாவாரி பயிர்களும், 13 ஆயிரத்து 255 எக்டர் நன்செய் பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
நிலவரி தள்ளுபடி
தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து உள்ளது. இதனால் நிலவரி தள்ளுபடி, கூட்டுறவு, வணிக வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் மத்தியகால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.60 கோடி வரை பயிர்க்கடன்கள் மத்தியகால கடன்களாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
நெல், வாழைக்கு எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500-ம், மானாவாரி பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.7 ஆயிரத்து 410-ம், நீண்டகால மரங்களுக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மத்திய குழு வருகை
கால்நடைகளுக்கு தீவனம் வழங்க ரூ.78 கோடியிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம், ரூ.3 ஆயிரத்து 400 கோடி செலவில் ஏரி, குளங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளுதல், குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.350 கோடி மதிப்பிலான திட்டங்கள், நகர்ப்புற நீராதாரத்தை மேம்படுதுதல் ரூ.150 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முக்காணியில் தடுப்பணை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 54 ஆயிரம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. மற்ற இடங்களிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயி அல்லாதவர்கள் நிவாரணம் பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு சங்கத்தில்...
அரசின் திட்டமான விவசாயிகளுக்கான கடன் உதவி திட்டத்தை செயல்படுத வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் கூட்டுறவு சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி நிதி வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைக்கலாம். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் தவறு செய்பவர்கள் மீது கூட்டுறவு சங்க இணை பதிவாளர், துணை பதிவாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமிநத்தம் பகுதியில் வாழை பயிருக்காக கடன்கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை ஆய்வு செய்த போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணே இல்லை. இதனால் விசாரணை நடந்து வருகிறது, என தெரிவித்தார்.

Next Story