ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள்,

கம்பம்

கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை கம்பம் காந்தி சிலையில் இருந்து ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டு தபால் நிலையம் முன்பு வந்தனர்.

பின்னர் அவர்கள், திடீரென தேனி–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story