ஆதார் எண் பதிவுக்கு பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
ஆதார் எண் பதிவுக்கு பணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ஆதார் பதிவு
நெல்லை மாவட்டத்தில் ஆதார் சேர்க்கை பணி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மட்டுமே நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. அதாவது தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் நடைபெறும் புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லாத சேவை ஆகும்.
ஆனால் சில தனிநபர்கள், விரைவாகவும், எளிதாகவும் ஆதார் எண் பெற்றுத் தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்தும், ஆதார் பதிவும் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களை ஏமாற்றும் செயல்பாடு ஆகும். இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை
எனவே பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் இருந்து அல்லது நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் ஆதார் எண்ணை பெறுவதற்கு தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று ஆதார் பதிவு செய்து கட்டணம் இல்லாத சேவையை பெறலாம்.
மேலும் இது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட வருவாய் அலுவலர், ஒருங்கிணைப்பு அலுவலரான கலால் உதவி ஆணையர் ஆகியோரிடம் நேரில் அல்லது டெலிபோன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Next Story