கியாஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது
கெருகம்பாக்கம் அருகே கியாஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது.
பூந்தமல்லி,
கெருகம்பாக்கம் அருகே கியாஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது.
கல்லூரிக்கு சிலிண்டர்கள்
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வகங்களில் பயன்படுத்துவதற்காக ஆக்சிஜன், நைட்ரஜன் வாயுக்கள் அடங்கிய பெரிய அளவிலான சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கோயம்பேட்டில் இருந்து பல்லாவரம் நோக்கி நேற்று காலை மினி டெம்போ ஒன்று சென்று கொண்டிருந்தது.
மினி டெம்போவை சுரேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். மதுரவாயல்-தாம்பரம் சாலையில் கெருகம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி டெம்போவின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை கண்ட டிரைவர் சுரேஷ், உடனடியாக மினி டெம்போவை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.
தீப்பிடித்தது
அப்போது மினி டெம்போவின் முன் பகுதியில் இருந்து மேலும் அதிகளவில் புகை வந்தது. சிறிது நேரத்தில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் சுதாரித்துக்கொண்ட சுரேஷ், அதில் இருந்த சிலிண்டர்களை அவசர அவசரமாக எடுத்து கீழே போட்டார்.
இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மினி டெம்போவில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளி கொட்டியும் அணைத்தனர். இதில் மினி டெம்போவின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
மின் கசிவு காரணமா?
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மினி டெம்போவில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
டிரைவர் சுரேஷ், சாமர்த்தியமாக செயல்பட்டு மினி டெம்போவில் இருந்த சிலிண்டர்களை உடனே கீழே எடுத்து போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story