மதுரையில் மாணவர்கள் ரெயில் மறியல்


மதுரையில் மாணவர்கள் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 20 Jan 2017 1:28 AM IST (Updated: 20 Jan 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் போராட்ட களத்தில் குதித்துள்ள மாணவர்கள்

மதுரை,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் போராட்ட களத்தில் குதித்துள்ள மாணவர்கள் நேற்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகியவை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் பல ரெயில்களும் அந்த பாதையில் திருப்பி விடப்பட்டன.

மதுரையில் இருந்து நேற்று இரவு 8.35 மணிக்கு சென்னை புறப்படவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லிலும், கோவை–நாகர்கோவில் பாசஞ்சர் செல்லூரிலும் நிறுத்தப்பட்டன. இதேபோல் மேலும் சில ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.


Next Story