அரசு பஸ் மோதி விவசாயி பலி; மனைவி படுகாயம்
மொபட் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி; மனைவி படுகாயம்
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தென்னூர் அருகே உள்ள வாலீஸ் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள் பிரான்சிஸ் பீட்டர் (வயது 40). விவசாயி. இவரது மனைவி ரோஸ்லீன் (37). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மொபட்டில் காட்டுமன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காடுவெட்டி கடைவீதி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருள் பிரான்சிஸ் பீட்டரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த ரோஸ்லீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் தஞ்சை மாவட்டம் காங்கேயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த கபிலன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story