மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறும் கும்பகோணத்தில் மதுரை ஆதீனம் பேட்டி


மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறும் கும்பகோணத்தில் மதுரை ஆதீனம் பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறும் என மதுரை ஆதீனம் கூறினார்.

கும்பகோணம்,

மதுரை ஆதீனம் பேட்டி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காசிமடத்தின் இளைய இளவரசராக திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கான விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள், கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பனந்தாள் காசி மடத்தின் இளவரசராக திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு எஜமான் சுவாமிகள் உரிய வழிகாட்டுவார். மடத்தின் மரபை காப்பாற்றும் வகையில் இளவரசர் பணியாற்றுவார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெற்றி பெறும்

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் அரசியல் மற்றும் மதசார்பு இல்லாமல் நடந்து வருகிறது. மாணவர்களின் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழர்களின் உணர்வுகளை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். எனவே இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story