உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உரிய நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை சாந்தி, கமலா தியேட்டர் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் அபிமன்னன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முகமதுஅலி, சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் மோகன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வேலை வாய்ப்பு, ஊதிய இழப்பு மற்றும் விவசாய பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ஆக ரூ.18 ஆயிரம் வழங்கி சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேலையின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜீவக்குமார், கண்ணன், ராமு, நம்பிராஜ், கோவிந்தராஜ், மருதமுத்து சம்சுதீன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story