வாடிய பயிர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி

சோமரசம்பேட்டை,
திருச்சியை அடுத்த கே.கள்ளிக்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பூங்குடி அருகே உள்ள எசனப்பட்டியில் வசிப்பவர் வீரப்பன். விவசாயி. எம்.ஏ. பட்டதாரியான இவர், தனக்கு சொந்தமான 4 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளார். இந்த நிலத்திற்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு அந்த வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. ஆகையால் தனது வயலில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர்் பாய்ச்சி வந்துள்ளார். ஆழ்துளை கிணற்று நீரின் மட்டமும் கீழிறங்கி விட்டதால் அதன் மூலம் கிடைத்த தண்ணீரும் கிடைக்காமல் போய்் விட்டது. இன்னும் 30 முதல் 35 நாள் வரை வளர வேண்டிய பயிர் தண்ணீர் இல்லாமல் வாட தொடங்கியது. அப்பகுதியில் உள்ள பயிர்களின் நிலைமையை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மணிகண்டம் ஒன்றிய வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்நிலையில் தனது பிள்ளை போல் வளர்த்து வந்த பயிரை காப்பாற்ற எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சி பயிரை காப்பாற்றி வருகிறார். வாடகை சற்று அதிகமானலும் பயிரை காப்பாற்றும் இவரது முயற்சியை பலரும் பாராட்டி செல்கின்றனர்.

Next Story