ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு சினிமா காட்சிகள் இன்று ரத்து


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு சினிமா காட்சிகள் இன்று ரத்து
x
தினத்தந்தி 20 Jan 2017 3:40 AM IST (Updated: 20 Jan 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினரும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினரும் களம் இறங்கி இருக்கிறார்கள். சினிமா படப்பிடிப்புகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. நடிகர்-நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் இன்று நடக்கிறது. இந்த நிலையில் திரையரங்குகளும் இன்று மூடப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று (20-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படுகின்றன. காலை முதல் மாலை 6 மணிவரை படகாட்சிகள் ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சினிமா காட்சிகள் இன்று நிறுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தால் புதிய படங்கள் திரைக்கு வருவதும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

Next Story