ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி மாணவிகள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி மாணவிகள் நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி மாணவிகள் நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
மேலும் வெளிக்கேட்டை இழுத்து மூடியது. இதை கண்டித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம், இது எங்கள் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம். ஆகவே அனுமதி அளியுங்கள் என்று கூறினர்.
பின்னர் கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்த பிறகு கல்லூரி மாணவிகள் பகல் 1 மணி அளவில் கல்லூரிக்கு வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட் டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக குரல் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து, கல்லூரிக்கு சென்றனர்.

Next Story