“மாணவர்களின் போராட்டத்தால் சாதகமான தீர்ப்பே அமையும்” இல.கணேசன் எம்.பி. பேட்டி

“மாணவர்களின் போராட்டத்தால் சாதகமான தீர்ப்பே அமையும்” இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2017 4:04 AM IST (Updated: 20 Jan 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகரில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.

வண்டலூர்,

மறைமலைநகரில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தான். இவர்கள் இந்த பிரச்சினைக்கு போராட தகுதியற்றவர்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பற்றைக்கண்டு பாராட்டுகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில், எந்த வித அவசர சட்டமும் இயற்ற இயலாத நிலை உள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கண்டிப்பாக சாதகமான தீர்ப்பே அமையும். அப்படி இல்லை என்றால் அதற்கு சட்டப்படியான நடவடிக்கையை மோடி அரசு எடுக்கும். ஆகையால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தங்களது போராட்டதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story