அத்திக்கடவு குடிநீர் முழுநேரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் அத்திக்கடவு குடிநீர் முழுநேரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்திக்கடவு குடிநீர்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1991-1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பிரதான குழாயில் இருந்து நாச்சிபாளையம் ரோடு வழியாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் மற்றும் அலகுமலை அடிவார காலனிக்கும் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலைத்தொட்டிக்கு ஏற்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அலகுமலை மற்றும் அடிவார பகுதி குழாய் அமைக்கப்படாமல் விடுபட்டு போனது. 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் அந்த ஊருக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
வறட்சியின் காரணமாக ஆழ்குழாய் கிணறும் வற்றி விட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அத்திக்கடவு திட்ட பொறியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.கிருஷ்ணாபுரம் பகுதி பொதுமக்களும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே ஏ.கிருஷ்ணாபுரம் மற்றும் அலகுமலை அடிவார காலனிகளுக்கு சீரான அத்திக்கடவு குடிநீர் கிடைக்க வசதியாக ஏ.வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சியின் மூலமாக மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.5¾ லட்சத்தில் மின் மோட்டாருடன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கதொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணிகளும் விரைந்து நடைபெற்று வந்தது. ஆனால் அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்து போனதால், பணிகள் தாமதமானது. பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர்.
முழுநேரமும் குடிநீர்
அதைத்தொடர்ந்து நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு தற்போது ஏ.கிருஷ்ணாபுரம், வேலாயுதம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி, அலகுமலை அடிவாரக்காலனி ஆகிய ஊர்களுக்கு அத்திக்கடவு திட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் அத்திக்கடவு திட்ட குடிநீர் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் ஒரு நாளைக்கு மும்முனை மின்சாரத்தின் மூலம் சுமார் 6 மணி நேரம் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் கிடைத்து வருகிறது. எனவே மும்முனை மின்சாரம் வழங்கி அத்திக்கடவு குடிநீர் தங்களுக்கு நாள்தோறும் முழுநேரமும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story