பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் போலீசாரின் தடையை மீறி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். அவர்களிடம், இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாவும், அதனால் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீசார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 12-ந் தேதியே அனுமதி வாங்கி விட்டதாகவும், எல்லோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த பிறகு தடை விதிப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம் என்று கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகளை எல்லாம் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் ஒலிபெருக்கி இணைப்பையும் துண்டித்தனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, வீரக்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் செல்வம், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர் வரதராஜன் பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை பயன்பாட்டிற்கு மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பயோ மெட்ரிக் டிவைஸ் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடக்கவிலை ரூ.3,400 என அதன் அட்டைப்பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.6 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து காசோலை பெறப்பட்டுள்ளது. இதனால் சங்கங்களுக்கு ரூ.1½ கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது திரும்ப பெறப்பட வேண்டும்.
நியாயவிலைக்கடைகளில் உள்ள காலி சாக்குகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் ரூ.18-க்கு எடுத்து கொள்ள வாய்ப்பு உள்ள நிலையில் வெளிசந்தையில் ரூ.15-க்கு குறையாமல் விற்க ஏதுவான சூழ்நிலை உள்ளது. ஆனால் ஒப்பந்த குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.350 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இத்தகைய மோசடிகளை தவிர்க்கும் வாயிலாக அந்தந்த சங்கங்களே லாபகரமான முறையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நியாயவிலைக்கடைகளில் தேவையில்லாமல் கட்டுப்பாடற்ற பொருட்கள் இறக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story