பாளையங்கோட்டையில் கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கூட்டுறவு பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெல்லை,
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பால்ராஜ், துணை தலைவர் காளிதாசன், இணை செயலாளர்கள் சேகர், ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொது சேவை மையத்தின் பயன்பாட்டுக்கு, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் கூடுதல் விலைக்கு ‘பயோ மெட்ரிக் டிவைஸ் மெஷின்‘ எனப்படும் எந்திரங்கள் வாங்கியதால் ஏற்பட்ட நிதி இழப்பை வழங்க வேண்டும், நவீனமயமாக்குதல் என்ற பெயரில் சங்க நிதி ரூ.15 லட்சம் வரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும், கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மாவட்ட அதிகாரிகளால் கட்டாய வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.
நிதி இழப்பு
ரேஷன் கடைகளில் உள்ள சாக்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், ரேஷன் கடைகளில் தேவை இல்லாமல் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையில்லாமல் நிதி இழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முகமது உசேன், பரமசிவன், சந்திரலால், தனபால், தேவேந்திரன், சுந்தரேசன், திருநாவுக்கரசு உள்பட கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story