திருமருகல் அருகே வெளிமாநில சாராயம் கடத்திய வாலிபர் கைது


திருமருகல் அருகே வெளிமாநில சாராயம் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2017 3:45 AM IST (Updated: 25 Jan 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே வெளிமாநில சாராயத்தை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திட்டச்சேரி,

வாலிபர் கைது

நாகை மாவட்டம் திட்டச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் கடத்தப்படுவதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டச்சேரி போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமருகல் ஒன்றியம் வடகரை பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் திருமருகலை அடுத்த போலகம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் மகன் வீரமணி (வயது24) என்பதும், இவர் காரைக்காலில் இருந்து புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 5 லிட்டர் வெளிமாநில சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story