நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ போராட்டம்
நாகர்கோவிலில் தண்ணீர் வசதி செய்து தரக்கோரி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி
நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்திலேயே தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி அடிக்கடி மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதேபோல் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடைபெறுவது உண்டு.
‘திடீர்’ போராட்டம்
இந்தநிலையில் நேற்று காலை அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி விடுதியில் உள்ள கழிப்பறை மற்றும் குளியலறைகளுக்கு சரியாக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைக்கண்டித்து ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக விடுதி மாணவர்கள் கைகளில் பிளாஸ்டிக் வாளிகளுடன் வந்து ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக மாணவர் விடுதியில் உள்ள கழிவறை மற்றும் குளியல் அறைகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் நாங்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளோம். எனவே எங்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான தண்ணீர் வசதியை செய்துதர வேண்டும்” என்றனர்.
டீன் விளக்கம்
இதுபற்றிய தகவல் அறிந்த அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அதிகாரிகள், மாணவர்கள் விடுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக மருத்துவ கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவியிடம் கேட்டபோது, “கல்லூரியில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்தோம். அதையடுத்து அவர் தினமும் 2 லாரி தண்ணீரை நகராட்சி மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது அவர்களால் சரிவர தண்ணீர் கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் விடுதி கழிப்பறை மற்றும் குளியலறைகளில் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நகராட்சியிடம் பேசி ஒரு லாரி தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளோம்” என்றார்.

Next Story