வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்


வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Jan 2017 4:15 AM IST (Updated: 26 Jan 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை, உதவி கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம்,

தேசிய வாக்காளர் தினம்


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமா£, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் கா£த்திகேயன், துணை தாசில்தார் செந்தில்குமா£ ஆகியோ£ முன்னிலை வகித்தனா. கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து பேரணி புறப்பட்டது. பல்வேறு வீதிகள் வழியாக சென்ற பேரணி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.

மாணவ–மாணவிகள்


பேரணியில் கல்லூரி மாணவ–மாணவிகள் 700–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி சென்ற மாணவ–மாணவிகள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியம் குறித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

பாபநாசம்


அதேபோல பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் தாசில்தார் திருமால் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி ஊர்வலமாக புறப்பட்டு பாபநாசம் மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக பள்ளியை வந்தடைந்தது. பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் தர்மராஜ், பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம், உதவி தலைமையாசிரியர்கள் விஜயன், கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ப்ராங்க்ளின், கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story