அந்தியூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் மாதம் முதல் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிடாமல் அந்தியூர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி காலம் தாழ்த்தி வருவதாக கூறி அவரை கண்டித்து அந்தியூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்தியூர்
செப்டம்பர் மாதம் முதல் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிடாமல் அந்தியூர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி காலம் தாழ்த்தி வருவதாக கூறி அவரை கண்டித்து அந்தியூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் வட்டார தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். வட்டார துணை செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநில செயலாளர் வின்சென்ட், மாவட்ட தலைவர் லூர்துபெலிக்ஸ், செயலாளர் யு.கே.சண்முகம், பொருளாளர் தமிழ்செழியன் உள்பட 100–க்கும் மேற்பட்ட ஆசிரிய–ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Next Story