தஞ்சை, நாகை மாவட்டத்தில் உள்ள 107 கோவில்களில் ரூ.16 லட்சம் செலவில் எச்சரிக்கை மணி
தஞ்சை, நாகை மாவட்டத்தில் உள்ள 107 கோவில்களில் ரூ.16 லட்சம் செலவில் எச்சரிக்கை மணி பொருத்தப்பட உள்ளதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் கூறினார்.
கும்பகோணம்,
விலைமதிக்க முடியாத சிலைகள்
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய 6 தாலுகாக்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 107 பெரிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் விலை மதிக்க முடியாத சாமி சிலைகள் உள்ளன. அதேபோல் சாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி நகைகள் கோவிலுக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்களும் உள்ளன. இவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 107 கோவில்களிலும் எச்சரிக்கை மணி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.16 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் எச்சரிக்கை மணி பொருத்தப்படும். இந்த பணி 6 மாதங்களுக்குள் நிறைவடையும்.
பொது நிதி
அறநிலையத்துறை ஆணையரின் பொதுநிதி மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான விலை பட்டியல் கோரப்பட்டுள்ளது. மின்சாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செயல்படும் விதமாக எச்சரிக்கை மணி பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story