தேசிய அளவிலான ஆக்கி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


தேசிய அளவிலான ஆக்கி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-30T22:22:28+05:30)

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரைஆலை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரைஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கவியரசன் குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கேலோ இந்தியா ஆக்கி போட்டியில் 17 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பள்ளியின் மற்றொரு மாணவர் கருணசிவா இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய தேசியஅளவிலான ஆக்கி போட்டியில் விளையாட மத்தியபிரதேசம் போபாலுக்கு சென்றுள்ளார். தேசிய அளவிலான ஆக்கி போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜா, மதுசிங், சுரேஷ் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் லக்குமணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பஞ்சவர்ணம், எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் ராமானுஜம், ராஜூ, சிதம்பரம், கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story