ஜெ.தீபா பேரவையின் விளம்பர பேனர்கள் ஏற்றிச்சென்ற மினிவேன் பறிமுதல்


ஜெ.தீபா பேரவையின் விளம்பர பேனர்கள் ஏற்றிச்சென்ற மினிவேன் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 30 Jan 2017 6:31 PM GMT)

முத்துப்பேட்டையில் ஜெ.தீபா பேரவையின் விளம்பர பேனர்கள் ஏற்றிச் சென்ற மினிவேனை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை,

ஜெ.தீபா பேரவை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை-மன்னார்குடி சாலையில் சம்பவத்தன்று ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. அந்த மினிவேனில் ஜெ.தீபா பேரவையின் விளம்பர பேனர்கள் இருந்தன. இதை பார்த்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் மினி வேனை வழிமறித்து, இந்த பேனர்களை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டனர். அப்போது முத்துப்பேட்டை நகரில் 10 இடங்களில் வைப்பதற்காக விளம்பர பேனர்களை கொண்டு செல்வதாக மினிவேனில் வந்தவர்கள் கூறினர்.

பறிமுதல்

இதையடுத்து விளம்பர பேனர்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி விளம்பர பேனர்களையும், அதை ஏற்றிச் சென்ற மினிவேனையும் முத்துப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மினிவேன் மற்றும் விளம்பர பேனர்கள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே ஜெ.தீபா பேரவையினர், பேனர் வைப்பதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெற்றனர். இதை தொடர்ந்து மினிவேனும், விளம்பர பேனர்களும் ஜெ.தீபா பேரவையினரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Next Story