சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 31 Jan 2017 3:00 AM IST (Updated: 31 Jan 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கைகாட்டி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அரியலூர் மாவட்டம் தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கைகாட்டி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்குள்ள ஜெயங்கொண்டம் சாலை அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 2000-2001-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தேளூர், வி.கைகாட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து போய் உள்ளன. மேலும் நீர்த்தேக்க தொட்டியை தாங்கும் தூண்களும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story