தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
திருப்பூர்,
காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நேற்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் மற்றும் பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
காந்தியின் நினைவு தினம் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை ஸ்பர்ஸ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தினமாக அனுசரிக்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது. இதையொட்டி, கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் மற்றும் பணியாளர்களும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
சமுதாயத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும் வகையில், ஒருவருக்கு கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, துணை கலெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story