கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:46 PM GMT (Updated: 2017-01-31T04:16:09+05:30)

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் நடராஜன். கூடலூர் பகுதியையும் அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

மதுராந்தகம்,

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் நடராஜன். கூடலூர் பகுதியையும் அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நடராஜனிடம் கூடலூர் பகுதியை சேர்ந்த மக்கள், ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியின் நீர்வரத்து கால்வாயை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஆக்கிரமிப்பை அகற்ற நடராஜன் நடவடிக்கை எடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜீவானந்தன் (வயது 47), கிராம நிர்வாக அலுவலர் நடராஜனை தாக்கினார். இதில் காயமடைந்த நடராஜன் இது குறித்து மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story