சுதேசி மில் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா


சுதேசி மில் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 30 Jan 2017 10:55 PM GMT (Updated: 2017-01-31T04:25:48+05:30)

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 3 ஆண்டுகள் பணிமுடித்த அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்

புதுச்சேரி,

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 3 ஆண்டுகள் பணிமுடித்த அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி மில் அருகில் புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். சங்க தலைவி திலகம் தலைமை தாங்கினார்.

அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன், நிர்வாகிகள் சீத்தாராமன், பிரேமதாசன், கிறிஸ்டோபர், நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, பரமேஸ்வரி, பூங்கோதை, முனியம்மாள், லலிதா, வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story