நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி உண்ணாவிரதம்


நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:56 PM GMT (Updated: 2017-01-31T04:26:08+05:30)

மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூர், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில நபர்கள் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை திருடி டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்களில் சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

செங்குன்றம்,

மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூர், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில நபர்கள் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை திருடி டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்களில் சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி மாத்தூர், மஞ்சம்பாக்கம் குடியிருப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.


Next Story